Short Story

ஆல்ஃபா அட் ஒமேகா தனது மனிதநேய சேவைக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த உங்கள் அனைவரது பங்கேற்பையும் அன்புடன் கோருகிறது. கடந்த புத்த பூர்ணிமாவில் தொடங்கி வரும் ஜுலை 17ம் தேதி குரு பூர்ணிமா முடிய இவ்வரும் நாட்களில் பல்வேறு புரோஜக்ட்களுக்கு அடிக்கல் இட முதல்கட்டமாக ரூ.10 லட்சம் பணம் Crowdfunding முறையில் சேகரிக்க முயற்சி எடுத்திருக்கிறோம். எமது இந்த முயற்சி வெற்றி பெற உங்கள் அனைவரின் பங்கேற்பையும் கோருகிறோம்.

மேலும் விவரங்கள் கீழே:

Alpha at Omega – Seed Fund

by Alpha at Omega Foundation

  • 1,000,000.00

    Funding Goal
  • 79,660.00

    Funds Raised
  • 0

    Days to go
  • Target Date

    Campaign End Method
Raised Percent :
7.97%
This campaign has been invalid or not started yet.
Chennai, India

Alpha at Omega Foundation

2 Campaigns | 0 Loved campaigns

See full bio

Campaign Story

அன்பர்களுக்கு ஒரு கோரிக்கை,

நல்ல தெய்வீக ஆற்றல் உங்களை எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா செயல்களிலும் வழிநடத்துவதாகவும் பாதுகாப்பாகவும் அமையுமாக.

எமது வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு கிடைத்த பதில்களை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் ஆல்ஃபா அட் ஒமேகா மனிதநேய மேம்பாட்டு மையம், ஜனவரி 18, 2012ம் தேதி தொடங்கினோம். இந்த கடிதத்தை எழுதும் இந்த நொடியில் கிட்டதட்ட 7 வருடங்கள் 4 மாதங்கள் ஓடி விட்டன. வாழ்வின் விளிம்பில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருப்பவர்களை வாழ்வின் அழகை ஆசுவதிக்க கற்றுக்கொடுக்கும் ஒரு நிலையமாகவே இந்த ஸ்தாபனத்தை முதலில் தொடங்கினோம். அதுவே நாளடைவில் இப்பிரபஞ்ச பேரறிவால் தூண்டப்பட்டு, எமக்கு பெரும் பொறுப்பு இருப்பதை சுட்டிக் காட்டி, மனிதம் உய்ய பல செயல்களையும் செய்வதற்குரிய ஸ்தாபனமாக மாறியது. இதுவரை எம்மால் என்னென்ன முடியுமோ அவற்றையெல்லாம் செய்து வருகிறோம்.

உருக உருக தூண்டப்பட்டு எரியும் மெழுகு திரி போல, எத்தனை இடர் வந்தாலும் இப்பிரபஞ்சத்தாய் எமக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற ‘ஆல்ஃபா அட் ஒமேகா மையத்தை” நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். “எல்லாம் ஒன்றே” என்ற பெரிய தத்துவத்தின் உண்மைத்துவத்தை மனித குலம் அறியவும், பிரிவினைகளும் பிணக்குகளும் இல்லாமல் மனிதம் வளர்ப்பதே முழு குறிக்கோளாக இந்த ஸ்தாபனம் இயங்கி வருகிறது.

2012ம் ஆண்டு பெண்கள் தினத்தில் “பெண்கள்” முன்னேற்றம் குறித்து நாம் எழுதிய “பிறக்காத என் மகளுக்கு..(Letters to My Unborn Daughter)″ என்ற புத்தகத்தில் தொடங்கி, “நீதான் அந்த அற்புதம்..(You are that Miracle), ஆத்மவிசாரணை இதழ், எல்லாம் அபரிமிதம், தங்கக்கோடாரி, நான் தெய்வீகத்தின் ஒரு படைப்பு சிதறல், சத்யயுகம், என்று எமது படைப்புகள் பல விரிந்தன.

2016ம் ஆண்டு நாம் தொடங்கிய விதை விருக்‌ஷமாகட்டும் யூட்யூப் சானலாகட்டும், அதனை தொடர்ந்து உருவாக்கப்பட்ட அகம், அற்புதம் குழுவாகட்டும் எல்லாம் எமக்கு தெய்வீக சமிக்ஞைகளாகவே தெரிந்தன. எல்லாவற்றைக் காட்டிலும் 2013ம் ஆண்டு கருவாக தோன்றி இன்னமும் பிரபஞ்சத்தால் மெருகூட்டப்பட்டு வரும் Channel O3 (O3 – Omnipotent, Omnipresent, Omniscient) எமது முழு நோக்கமாக பதியப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டு காலமாக இதனை எடுத்து செல்வது என்பது எமக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. எந்த அடிப்படை சார்தலும் இல்லாமல், எந்த மதத்தையோ இனத்தையோ சாராமல் மனித முன்னேற்றத்திற்கு பிரிவினைகளைத் தாண்டி ஒருமைத்தன்மை என்கிறபோது பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் இன்று வரை அதனை மிகுந்த பிரயத்தனப்பட்டு நடத்தி வருகிறோம். இத்தருணத்தில் இது இனி ”ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்” என்ற புரிதலே இக்கடிதம் எழுத எம்மை தூண்டியது.

ஆல்ஃபா அட் ஒமேகா” மையம் நேர்கொண்டிருக்கும் பல செயல்திட்டங்களுக்கு வடிவம் கொடுக்க ஒருவரோ அல்லது ஒரு சிலரோ செய்தால் மட்டும் போதாது. எல்லா திட்டங்களும் நல்லபடியாக நிறைவேறும் பட்சத்தில் மட்டுமே அது மனிதத்திற்கு முழுவதும் பயன்படும் என்று தெளிவாகியபடியால் அத்திட்டங்களுக்கு உங்கள் அனைத்து விதமான ஆதரவை எதிர் நோக்கி கோரிக்கை விடுக்கவே இந்த கடிதம்.

ஆரம்பத்தில் இருந்தே நமது ஸ்தாபனத்தில் நன்கொடை இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். பகுதி நேரமாக இந்த செயல்களை செய்த நான் ஜூன் 2018 முதல் எமது உண்மை தொழிலையும் தாண்டி முழு நேரமாக செயல்பட ஆரம்பித்தோம். ஆனால் இத்தகைய செயல்பாடுகளில் வங்கிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. Channel O3 போன்ற நல்ல திட்டங்களுக்கு முதலீடும் கிடைப்பது இல்லை, கடனும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த செயல்கள் நடைபெற பணம் ஒரு தடையாக இருப்பதைக் காண முடிந்தது.

ஆனாலும் இப்போதும் மனம் தளராது உங்கள் ஆதரவை தேடி வந்திருக்கிறோம். நாம் இதுவரை உருவாக்கிய அத்துணை விஷயத்தையும் இத்தொகுப்பில் பட்டியலிட்டு இருக்கிறோம். அவை எப்படி இந்த மனிதத்திற்கு பயனளிக்கும் என்பதையும் தந்திருக்கிறோம். உங்களால் எப்படி இதில் பங்கு பெற முடியும், உங்களுக்கு இதில் ஆதாயங்கள் என்ன என்பதையும் பிரபஞ்ச கட்டளைப்படி திட்டமிட்டு தந்திருக்கிறோம்.

எமது விருப்பமெல்லாம் இப்பிரபஞ்சம் எம்மை செய்ய தூண்டியவற்றை சரியாக செய்து சத்திய யுகத்திற்கான வித்தினை எமது இறுதிக்கு முன் இடுவது என்பதே. நிச்சயம் இந்த தருணம் வரும் என தெரிந்தே உங்களையும் பிரபஞ்ச பேரறிவு படைத்திருக்கலாம்.

சிறிதளவேனும் முடிந்தவரை இச்செயல்திட்டங்கள் வெற்றி பெற ஆதரவளிக்கவும்.

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!!

அன்பும் அபரிமிதமும் நிறைய

அன்புடன்

.வி.ஆர்.

இந்த க்ரவுட்ஃபண்டிங் (கூட்டநிதி திரட்டல்) எதற்காக?

ஆல்ஃபா அட் ஒமேகாவின் இந்த நிதிதிரட்டல் மூலம் கிடைக்கும் பணம் கொண்டு கீழ்காணும் செயல்திட்டங்களுக்கான அடிப்படைகளுக்காக செலவிடப்படும். அன்பும், ஆதரவும் அளித்து தாங்கள் அளிக்கும் பணம் கீழ்காணும் ஏதோ ஒரு விஷயத்தில் உங்களுக்கு புத்தகமாகவோ,  பொருளாகவோ, அல்லது நிகழ்ச்சி நுழைவு சீட்டாகவோ, நமது உறுப்பினர் தளத்தின் அங்கத்துவமாகவோ வழங்கப்படும். ஒரு நூறு ரூபாய் வழங்கி ஆதரவு அளிப்போரும் “மனிதநேய வளர்ச்சிக்கான” எமது பயணத்தின் ஒரு காரணி ஆவார். அவர்களின் பெயர் என்றும் எமது பதிவேட்டிலும், இணையதளத்திலும் பதிவேற்றப்படும்.

முதலில் என்னென்ன திட்டங்கள் உள்ளது எனப் பார்ப்போம்:

1. மனித மனதின் ஆற்றல் அறிய “அகம், அற்புதம்” இணையக் குழுமம்.

நமது விதை விருக்ஷமாகட்டும் யூட்யூப் சானல் மூலம் உருவான இந்த இணையதளம் சுயமுன்னேற்றம், மற்றும் மனதின் ஆற்றலை எடுத்து சொல்லும் பல கட்டுரைகளை இன்று தன்னுள்ளே ஏற்று பொலிவு பெற்று வருகிறது. அகம்,
அற்புதம் உறுப்பினர் இணைய தளமும் செயல்பட்டு வருகிறது. மனித மனம் என்றும் தோல்வியில் துவளாமல் இருக்கவும், பிரபஞ்ச விதிகளை சரிவர புரிந்து செயலாற்றவும் இந்த தளம் உதவுகிறது.

 

2. அறிவுப் பெட்டக நூலகம் அடங்கிய ஆன்மீக மையம்.

எமது வாழ்நாள் கனவுகளில் ஒன்று இந்த நூலகம். ஞானத் தேடலில் உள்ளவர் அனைவருக்கும் தாகம் தணிக்கும் இடமாக இது இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்

3. புத்தகப் பிரசுரம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லா விதத்திலும் பயனுற நமது புத்தகங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பின் வரும் வகையறாக்களில் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

  1. பிஞ்சுக் குழந்தைகளுக்கான படக்கதை புத்தகங்கள் (மாறுபட்ட நீதிக்கதை புத்தகங்கள்)
  2. பிரபஞ்சம், மனம் குறித்து நான் எழுதிய சொந்த எழுத்து புத்தகங்கள்
  3. மனம், பிரபஞ்சம், ஈர்ப்பு விதி குறித்த பிரபல ஆங்கில/பிறமொழிப் புத்தகங்களின் தமிழாக்கங்கள்

குழந்தைகளுக்கான புதிய நீதிக் கதைகள் முதல் பெரியவர்களுக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு, அச்சு
வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டு வருகின்றன. இவை முழு வடிவம் பெற்று அனைவருக்கும் உதவ
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த நிதி திரட்டலின் மிக முக்கிய அம்சமும் இதுவே.

வரும் 2020 புத்தக கண்காட்சி முதல் இந்த புத்தகங்கள் உலக மக்கள் பார்வையில் விற்பனைக்கு வரவேண்டும்.
அந்த காலத்தில் பெரியோர்கள் தமக்கு தெரிந்ததை எழுத்து வடிவில் பரிபாஷைகளில் விட்டு சென்றனர். இன்று நமக்கு
தெரிந்த வழியில் இதை செய்வோம். அவ்வளவே.

4. குழந்தைகளுக்கான அனிமேஷன் சானல்

குழந்தைகளிடம் நல்ல விஷயங்களை கற்பித்து விட்டால் போதும் அடுத்த தலைமுறை சிறப்பாக வாழும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதனாலேயே இந்த ஒரு முயற்சி. நல்ல புதிய நீதிக்கதைகள், பிரபஞ்ச பேராற்றல் பற்றிய புரிதலுக்கான கதைகள், ஜென் மற்றும் சூஃபி கதைகள் என்று பலதும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் அவற்றை அடிப்படை விரிவாக்கம் செய்வதுவும் இந்த நிதிதிரட்டலின் நோக்கம்.

 

5. ஆத்மவிசாரணை பத்திரிக்கை

உண்மையில் ஒரு வலைப்பூ தளமாக 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இது நண்பர்களுக்கு மட்டுமே பகிர்ந்து கொண்ட 4 பக்க இதழாக பரிணாமம் பெற்றது. இனி பல நல்ல பக்கங்களை கொண்ட சுயமுன்னேற்ற மற்றும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் பருவ மாத இதழாக இது மலரும். பெயரும் “அகம், அற்புதம்” என்றே மாற்றப்படும்.

6. சேனல் O3 – மனிதத்திற்கான முதல் டி.வி. சானல்

எமது வாழ்வில் முழு நோக்கமே இந்த திட்டம் தான். மனிதநேயம் வளர்க்க நாம் அறிந்ததை உள்ள துறையில் செயல்படுத்துவோம் என்பதே என் எண்ணம். 7 பிப்ரவரி 2013ல் தொடங்கப்பட்டு 28 ஆவண குறும்படங்களுடன் இருக்கும் சேனல் O3 மேலும் மனிதநேய வளர்ச்சிக்காக முழு நேர டி.வி. சேனலாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் உடனே செயல்படுத்தப்பட்டு, இரண்டாம் கட்டமாக இதன் முழு திட்ட அறிக்கை வரையப்பட்டு செயல்படுத்தப்படும்.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக  “ஆல்ஃபா அட் ஒமேகாவிற்கு சென்னையில் பயிலரங்கத்துடன் கூடிய அலுவலகம்” ஒன்று தேவைப்படுகிறது. அதிலிருந்து மட்டுமே இவைகளை செயல்படுத்தமுடியும். இவை அனைத்திற்கான அடிப்படை முதலீடு சேர்க்கும் முதற்கட்ட முயற்சியே இது.

லாபம் தரும் என்று பார்க்காமல், நல்ல விஷயங்களை செய்து நல்ல வித்துக்களை மண்ணில் விதைப்போம் என்று எண்ணும் உங்கள் போல் நல்லுள்ளங்கள் தேவை எங்களுக்கு. அதனால் தான் உங்கள் உதவிக்காக Crowdfunding முறையை கையில் எடுத்து இருக்கிறோம்.

ஆல்ஃபா அட் ஒமேகாவின் மேற்கண்ட செயல்திட்டங்கள் சரிவர நடக்க முதல் கட்டமாக ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது.

இவற்றை நீங்கள் கீழ்காணும் விதத்தில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி ஆதரவு தெரிவிக்கலாம். மிகவும் திறந்த மனதுடன் சொல்கிறோம். இந்த பணம் நன்கொடையாகவோ முதலீடாகவோ பெறப்படவில்லை. ஆனால்
மனிதநேயத்தின் ஒரு விதையாக இங்கு இது பெறப்படுகிறது. மேற்கண்ட செயல்திட்டங்களுக்காக அவை செலவு செய்யப்படப்போகின்றன. அதே நேரத்தில் நீங்கள் செலுத்திய பணத்திற்கான ஈடாக அதைவிட பன்மடங்கு மதிப்புள்ள
பொருட்களை உங்களுக்கு அளிக்கிறோம். நீங்கள் எந்த அளவிற்கு உதவ முடியும், அதனால் அதற்கு ஈடாக உங்களுக்கு கிடைப்பது என்ன என்று அருகில் உள்ள Rewards அட்டவணையைக் கண்டு அறிந்துக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற அல்லது தங்களுக்கு சரி என்று படும் விஷயத்தை தேர்ந்தெடுத்து மனிதம் வளர உதவுங்கள்.

ஒரு நூறு பேர் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் இந்த முதற்கட்டத்தை தாண்டி விடமுடியும். மனித சரித்திரத்தின் வித்துக்களாக மாற முடியும். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் கூடிய விரைவில் நம் மையத்திற்கான பயிலரங்கக் கூடம் அடங்கிய அலுவலகம் திறக்க முடியும். மேல் சொன்ன ஒவ்வொரு திட்டத்தையும் கூறப்பட்டுள்ள கால அளவில் முடிக்க முடியும். பிரபஞ்ச விதிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இத்தொடக்கமே அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டு செல்லும்.

ஆல்ஃபா அட் ஒமேகாவின் முன்னேற்றப்பாதைக்கும், மனித நேயம் தழைப்பதற்கான வித்திடலுக்கும் தங்கள் ஆதரவினை என்றும் எதிர்நோக்கியிருக்கிறோம்.

வாழ்க வளமுடன்!

வாழ்க வையகம்!!

 

எப்படி பணம் செலுத்துவது?

 

நமது நல்ல செயல்திட்டங்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து பணம் செலுத்துவது எப்படி என்பது குறித்து கீழே உள்ள காணொளியில் காணலாம்.

Rewards

100

உங்கள் அன்புமிக்க ஆதரவுக்கு நன்றி. இதன் வெளிப்பாடாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 3 மாதத்திற்கு நமது மாதாந்திர இதழின் மின்பதிப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

August, 2019

Estimated Delivery
Campaign already completed.
4 backers

500

உங்கள் அன்புமிக்க ஆதரவுக்கு நன்றி. இதன் வெளிப்பாடாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 1 வருடத்திற்கு நமது மாதாந்திர இதழின் அச்சுப்பதிப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். (அல்லது வேண்டுபவர்களுக்கு / வெளிநாட்டவர் எனில் மின்பதிப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்)

August, 2019

Estimated Delivery
Campaign already completed.
16 backers

1000

உங்கள் அன்புமிக்க ஆதரவுக்கு நன்றி. இதன் வெளிப்பாடாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 1 வருடத்திற்கு நமது மாதாந்திர இதழின் அச்சுப்பதிப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். (அல்லது வேண்டுபவர்களுக்கு / வெளிநாட்டவர் எனில் 3 வருடத்திற்கு மின்பதிப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்). </strong>உடன் ”மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்” புத்தகம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் (இலக்க தேதி : 1 ஜனவரி 2020)

August, 2019

Estimated Delivery
Campaign already completed.
15 backers

5000

உங்கள் அன்புமிக்க ஆதரவுக்கு நன்றி. மிகவும் அன்பான உங்களுக்கு ஆல்ஃபா அட் ஒமேகா வரும் ஜனவரி 2020ல் பிரசுரம் செய்யும் அனைத்து தமிழ் புத்தகங்களின் பிரதியும், நமது மாதாந்திரிக்கு 1 வருட சந்தாவும் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். </strong>இதனுடன் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஆல்ஃபா அட் ஒமேகாவினால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு உங்களுக்கு இலவச அனுமதிச்சீட்டு அளிக்கப்படும்.

January, 2020

Estimated Delivery
Campaign already completed.
4 backers

10000

உங்கள் அன்புமிக்க ஆதரவுக்கு நன்றி. எங்கள் சிறப்பு ஆதரவாளரான உங்களுக்கு ஆல்ஃபா அட் ஒமேகா வரும் ஜனவரி 2020ல் பிரசுரம் செய்யும் அனைத்து தமிழ் புத்தகங்களின் பிரதியும், நமது மாதாந்திரிக்கு 1 வருட சந்தாவும் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். </strong>இதனுடன் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஆல்ஃபா அட் ஒமேகாவினால் நடத்தப்படும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உங்களுக்கு இலவச அனுமதிச்சீட்டு அளிக்கப்படும். மேலும் சானல் O3க்கான இலவச ஆக்சஸ்-ம், ஒரு வருட அகம், அற்புதம் உறுப்பினர் தள நுழைவும் கிடைக்கும்.

January, 2020

Estimated Delivery
Campaign already completed.
2 backers
Name Donate Amount Date
Kirubakaran.v V 5,000.00 July 14, 2019
Jayalakshmi Thiruvengadam 500.00 July 13, 2019
Saravanan D 1,000.00 July 12, 2019
Ravishankar Thiyagarajan 1,000.00 July 12, 2019
Anonymous 1,000.00 July 11, 2019
Tamilvani Sathya 500.00 July 08, 2019
Mohammed Ghulam Mohideen 1,000.00 July 07, 2019
senthilkumar k 500.00 July 07, 2019
K.T. THILAGAR 100.00 July 07, 2019
Aravind K 500.00 July 06, 2019
V ARUMUGAM 500.00 July 05, 2019
Dhanalakshmi.R.S Lakshmi 500.00 July 05, 2019
Eialarasu VT 1,000.00 July 05, 2019
Elavarasan E 500.00 July 05, 2019
Anonymous 2,000.00 July 05, 2019
Praveen Kumar Dhanavel 1,000.00 July 04, 2019
CS MADHAIYAN 1,000.00 July 04, 2019
Anonymous 500.00 July 03, 2019
VEERAMAHALAKSHMI O 1,000.00 July 03, 2019
Prabhu Hariharan 100.00 July 03, 2019
SAKTHIVEL PERUMAL 1,000.00 July 02, 2019
Sharmila R 1,000.00 July 02, 2019
Sudalai kani R 1,000.00 June 30, 2019
Manivannan J 1,000.00 June 29, 2019
Narayanan Kallapiran 500.00 June 28, 2019
Anonymous 10,000.00 June 28, 2019
Anonymous 25,000.00 June 28, 2019
Gopi V.K 500.00 June 28, 2019
VASANTHAGEETHAN R 500.00 June 27, 2019
Anonymous 100.00 June 26, 2019
Gopikrishna Govindarajan 1,000.00 June 25, 2019
Solomon Sudarson 1,000.00 June 25, 2019
Anonymous 5,000.00 June 23, 2019
Karthick Ganesh 500.00 June 22, 2019
L SURESH 500.00 June 22, 2019
Ayyappan Rajagopal 500.00 June 22, 2019
Govind Purohit 500.00 June 22, 2019
Abiramy Krishnan 750.00 June 20, 2019
Sumathi .Sumathi 5,000.00 June 20, 2019
Siranjivi . 5,000.00 June 20, 2019
Anonymous 110.00 June 19, 2019

1 review for Alpha at Omega – Seed Fund

  1. vamsy krishnan

    sir you are speaking about law of uncertainity in your andamum pindamum series. you are also quoting Abraham Hicks that ” when i blame someone to another for my failure, then i become powerless to make any change”.
    then you are telling in your video that many people back stabbed you.. why there exists so many antagonism is active within you. when you are going to see all these within you sir?

    • Alpha at Omega Foundation (verified owner)

      Sir, at no point of time I claimed they are responsible for all my failures. If you can understand what Hicks said or what Law of uncertainty speaks, you may note that attracting people who don’t match your vibes is also your responsibility. I realized that one already. When spoken in general sense, what you understood might be a mistaken one. I can only be responsible for what is spoken and not what you understood sir. Really sorry it went that way. What others caused me is real. But I know in the first place I only have attracted them to me. If I have not forgiven the happenings or people and realized what I have is enough, I will not be alive now. (From powerless to power to change) I say that “backstabbed” statement only to endorse what has happened then and what happened thereafter. “Antagonism” is little bit too much of a judgment. But its ok. I happily accept that, coz thats from a person who don’t know me well in person. Thanks.

Add a review

Your email address will not be published. Required fields are marked *